ஞாயிறு, டிசம்பர் 09, 2012

தடைகற்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கியவர் நீங்கள்..சோனியாவை புகழும் கருணாநிதி !

சென்னை: "தடைகற்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கியவர் நீங்கள்" என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு நாளை 66-வது பிறந்தநாள்.இதற்காக திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியிருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாது: என் இதயம் கனிந்த மிக, மிக
மகிழ்ச்சியான பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான நீங்கள் பல தடைகளை திறமையாக கடந்து வந்துள்ளீர்கள். பல தடைகளை நீங்கள் வெற்றிகரமாக எதிர் கொண்டீர்கள். அடிக்கடி சொல்வது போல தடை கற்களை நீங்கள் பெரிய வெற்றிப் படிக்கட்டுக்களாக மாற்றியுள்ளீர்கள்.
நாட்டில் தற்போது நிலவும் சிக்கலான சூழ்நிலையில் மத்தியில் உங்கள் ஒருவரால்தான் மதச் சார்பற்ற, நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சில முட்டுக்கட்டைகள் இருந்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதனைகள் படைத்துள்ளது. இந்த நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீதும் அவர்களது நல்வாழ்வு மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
தி.மு.க. சார்பில் உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக