ஞாயிறு, டிசம்பர் 09, 2012

அதிரை தமீம் அன்சாரி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது!

தஞ்சை:இராணுவ ரகசியங்களை இலங்கை வழியே பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாக கைது  செய்யப்பட்ட அதிரை தமீம் அன்சாரி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது.தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த வெங்காயம், உருளை வியாபாரியான தமீம் அன்சாரியை கடந்த  செப்டம்பர் 17-ந் தேதி திருச்சியில் கியூ பிரிவு போலீஸ் கைது செய்தது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலமாக இந்திய ராணுவ ரகசியங்களை  கடத்தினார் என்பது தமீம் அன்சாரி மீதான குற்றச்சாட்டு.

மேலும் தமீம் அன்சாரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்  என்று கியூ பிரிவு போலீஸ் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய  பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய பொது மற்றும் சட்டத் துறைச் செயலர்  கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புச்  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, பாதுகாப்புடன் கூடிய  தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக