சனி, டிசம்பர் 15, 2012

அன்னிய முதலீட்டு சில்லறை நிறுவனங்களுக்கு கேரளாவில் அனுமதி இல்லை-உம்மன்சாண்டி !

திருவனந்தபுரம், டிச.14-கேரள மாநில சட்டசபையில் நேற்று ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீதான அறிக்கை ஒன்றை எதிர்கட்சிகள் கொண்டு வந்தது. அதில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அய்க்கிய ஜனநாயக முன்னணி, சில்லறை வர்த்தகத்துக்கான அன்னிய முதலீட்டுக்கு தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தது. அதே போன்று, கேரளாவில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சில்லறை
வர்த்தகத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்து முதல் அமைச்சர்  உம்மன்சாண்டி பேசுகையில், கேரளாவில் எனது ஆட்சிக்காலம் நடக்கும் வரையிலும், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் அமைக்க அனுமதி கிடையாது. இது சம்பந்தமாக, ஏற்கனவே எனது அரசு எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த முடிவு சம்பந்தமாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் கட்சித்தலைவர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக