செவ்வாய், டிசம்பர் 04, 2012

மலேகான்:முஸ்லிம்களை சிக்கவைக்க மிரட்டிய ஏ.டி.எஸ்!

புதுடெல்லி:மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம்களை குற்றவாளிகளாக மாற்ற முக்கிய சாட்சியை மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய சாட்சியான அப்ரார் அஹ்மத் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏவிற்கு நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பிற்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாம் காரணம் என்று சுவாமி அசிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பிறகு என்.ஐ.ஏ இவ்வழக்கின் விசாரணையை ஏற்றுக்கொண்டது. பின்னர் ஏன் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் ஒன்பது முஸ்லிம்களை இவ்வழக்கில் கைது செய்தது என்பதுக் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் இத்தகவல் தெரியவந்தது.அப்ரார் மூலமாக ஒன்பது முஸ்லிம்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பதுக் குறித்து என்.ஐ.ஏ விசாரிக்கிறது. இவ்வழக்கில் கர்னல் புரோகித் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்களை சிக்க வைக்க ஏ.டி.எஸ் மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டியது அப்ரார் மூலமாக தெரியவந்துள்ளது. தனது வாக்குமூலங்களை பிரமாணப்பத்திரமாக நீதிமன்றத்தில் அப்ரார் சமர்ப்பித்துள்ளார். மேலும் ஒரு பத்திரிகைக்கு பேட்டியும் அளித்துள்ளார். ஆனாலும் என்.ஐ.ஏ அவரை முழுமையாக நம்பவில்லை என்று என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் கூறுகிறார்.பேட்டிக்கு பிறகு அப்ராரிடம் விசாரணை நடத்தியபொழுது புரோகித்தை இதுவரை தனது வாழ்நாளில் கண்டதில்லை என்று கூறியதாக என்.ஐ.ஏ கூறுகிறது. ஏ.டி.எஸ் அப்ராரிடம் நிர்பந்தம் அளித்தது என்பதையும் என்.ஐ.ஏ முழுமையாக நம்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக