பாலஸ்தீனத்திற்கு எதிராக புதிய குடியிருப்பு பகுதியை அமைக்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஜெருசலேம் மாலே அதுமிம் பகுதிகளில் 3,000 வீடுகள் கொண்ட யூதக் குடியிருப்பை ஏற்படுத்த ஆக்கிரமிப்பு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. பாலஸ்தீனியர்கள்
இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வெஸ்ட் பேங்க் பகுதியில் இருந்து கிழக்கு ஜெருசலேம் பகுதி துண்டிக்கப்படும், அப்பகுதி மக்கள் மேலும் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் இத்திட்டத்திற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் இம்முயற்சி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். இது உயிரிழப்பை ஏற்படுத்தும் மோதலுக்கு வழிவகுக்கும்.
இச்செயல் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது என ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், தனது தூதர்களை திரும்பப் பெற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக