காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கும் நிலையில்,இன்றும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தமிழகத்தில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச
நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகூர் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணை தொடங்கிய உடனேயே, எடுத்த எடுப்பில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தை தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகூர் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணை தொடங்கிய உடனேயே, எடுத்த எடுப்பில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தை தொடர்ந்தார்.
அவர் வாதிடுகையில்," கர்நாடகா தனது அணைகளில் சட்ட விரோதமாக தண்ணீரை தேக்கி வைத்து உள்ளது. அதில் இருந்து எங்களுக்குரிய தண்ணீரை திறந்துவிட மறுப்பதும் சட்ட விரோதம். தமிழ் நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடாவிட்டால், தமிழகத்தின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.தற்போது கர்நாடகத்தில் வறட்சி என்ற நிலை உருவாகவில்லை. அங்கு அறுவடை காலமும் முடிந்துவிட்டது. அடுத்த அறுவடை காலத்துக்காக தண்ணீர் தேவை என்று சேமித்து வைத்து இருப்பதாக கர்நாடகம் கூறுவது சரியல்ல. இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஆகவே, காவிரியில் உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்"என்றார்.
இந்நிலையில் தமிழக அரசு வழக்கறிஞரின் வாதத்தை எதிர்த்து வாதிட்ட கர்நாடக அரசு வழக்கறிஞர் அனில் திவான்,"காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறோம். ஆனால் இப்போது திறந்து விடுவதற்கு கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை.
காவிரி பிரச்சினை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு குழு ஆகியவற்றின் முடிவுகளை தமிழக அரசு எதிர்க்கவில்லை. அதற்கிடையில், தமிழக அரசு இவ்வாறு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு முகாந்திரம் இல்லை. இந்த மனுக்களை நீதிபதிகள் விசாரிக்கக்கூடாது. தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.
இதைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக