புதன், டிசம்பர் 05, 2012

ஈரான் எல்லைக்குள் வேவு பார்த்த அமெரிக்க ஆளில்லா விமானம் தரையிறக்கம்

வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்து அமெரிக்கா அப்பகுதியில் வேவு வேலைகள் பார்த்துவருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஈரான் அதிகமாக நியூக்ளியர் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தங்களது
எல்லைக்குள் வேவு வேலை பார்ப்பதற்காக அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ஸ்கேன் ஈகிள் என்ற அமெரிக்க ஆளில்லா விமானத்தை எங்களது புரட்சிகர பாதுகாப்பு படை வழிமறித்து பிடித்துள்ளது என்ற செய்தியை ஈரான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


வேவு பார்க்க அனுப்பப்படும் ஆளில்லா விமானங்களை தரையிறக்க வானில் எலக்ட்ரானிக் போர் நடத்தவேண்டியிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளது. ஆனால் மத்திய கிழக்கு பகுதியில் ஆளில்லா விமானம் எதையும் நாங்கள் இழக்கவில்லை என்று அமெரிக்காவும் பதில் கூறியுள்ளது. அமெரிக்கன் ஆர்.க்யூ.-170 என்ற ஆளில்லா விமானத்தை ஈரான் முன்பு தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக