ஆமதாபாத்:குஜராத் சட்டசபை தேர்தலில், முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி, சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா, காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். குஜராத்தில், நரேந்திர மோடி தலைமையிலான, பாசிச.ஜ.க, ஆட்சி நடக்கிறது. இங்கு, 2002ல் நிகழ்ந்த கலவரம் தொடர்பான
வழக்கில், முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, சஞ்சீவ் பட் என்ற நேர்மையான போலீஸ் அதிகாரி, சுப்ரீம் கோர்ட்டில், சாட்சியம் அளித்தார். இதையடுத்து,
வழக்கில், முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, சஞ்சீவ் பட் என்ற நேர்மையான போலீஸ் அதிகாரி, சுப்ரீம் கோர்ட்டில், சாட்சியம் அளித்தார். இதையடுத்து,
கடந்தாண்டு ஆகஸ்ட்டில், சஞ்சீவ் பட், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது, போலீஸ் வாகனத்தை, தவறாக பயன்படுத்தியதாகவும், போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இம் மாதம், 13 மற்றும், 17ம் தேதிகளில், குஜராத் சட்டசபை தேர்தல், இரண்டு கட்டங்களாக நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, இம்மாதம், 20ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில், முதல்வர் நரேந்திர மோடி, மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்த தொகுதியில், 2002லிருந்து, தொடர்ந்து அவர், வெற்றி பெற்று வருகிறார். கடந்த தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட, காங்., வேட்பாளரை விட, 75 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.இந்த தேர்தலில், அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு, பொருத்தமான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி, ஸ்வேதா பட், காங்கிரஸ் வேட்பாளராக, அறிவிக்கப்பட்டு உள்ளார்.இதற்காக, தன் கணவருடன் வந்து, நேற்று அவர், வேட்பு மனு தாக்கல் செய்தார். ஸ்வேதா கூறியதாவது:காங்கிரஸ் வேட்பாளராக, மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன். ஜனநாயக பாதையை விட்டு, குஜராத் மாநிலம், வெகுதூரம் விலகிச் சென்று விட்டது. ஜனநாயகத்தை காப்பதற்காக, ஒவ்வொருவரும், தங்களால் முடிந்தவரை போராட வேண்டும். என்னுடைய முயற்சியாக, நரன் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுகிறேன்.இவ்வாறு ஸ்வேதா கூறினார். குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, சஞ்சீவ் பட்டின் மனைவி போட்டியிடுவது, தேர்தல் களத்தை, பரபரப்பாக்கியுள்ளது. இதற்கிடையே, முதல்வர் நரேந்திர மோடியும், மணிநகர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக