சனி, டிசம்பர் 01, 2012

சிரியாவில் நீடித்து வரும் சண்டை: விமான சேவை ரத்து

சிரியா தலைநகர் டமாஸ்கசில் கடும் சண்டை நடப்பதால் நேற்று விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலக கோரி, புரட்சி படையினர் கடந்த 20 மாதங்களாக போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க அரசு இராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் சிரியாவின் வர்த்தக நகரான அலெப்போ மற்றும்
எல்லைப்புற பகுதிகளை புரட்சி படையினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். இதை மீட்க இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையே தலைநகர் டமாஸ்கசில் உள்ள விமான நிலையம் அருகே இராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இதனால் நேற்று இந்த நகரில் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்தையொட்டி உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், மாலை வரை விமானச் சேவை ரத்தாகியிருந்தது.
மேலும் தகவல் தொடர்பு கோபுரங்கள் சிதைக்கப்பட்டதால் இணையம் மற்றும் கைப்பேசி சேவைகளும் பாதிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக