செவ்வாய், டிசம்பர் 18, 2012

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது !

புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு 68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டான்சிங்கை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது  செய்துள்ளது. ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டான்சிங்கை என்.ஐ.ஏ கைது
செய்துள்ளது. 2008-ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் டான்சிங்கிற்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுவாமிஜி என்ற போலி பெயரில் டான்சிங் அப்பகுதியில் தங்கியிருந்துள்ளான்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டுவைத்த முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரியை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கடந்த 15-ஆம் தேதி என்.ஐ.ஏ கைது செய்திருந்தது. இவனுக்கு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ தெரிவித்தது. ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுதரியை என்.ஐ.ஏ 12 தினங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றுள்ளது.
இவ்வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான கமல் சவுகான், சுவாமி அசிமானந்தா, லோகேஷ் சர்மா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் 68 பேர் அநியாயமாக பலியாகினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக