கோவில்பட்டி: இலவசங்களை தரவேண்டும் என்பதற்காகவும், அரசாங்கத்திற்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காகவும் மதுக்கடைகளை திறப்பது எந்த விதத்தில் நியாயம் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 12ம் தேதி உவரியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் இன்று 7 வது நாளை எட்டியுள்ளது. கோவில்பட்டியில் பயணத்தை தொடங்கிய வைகோவிற்கு வழி எங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடையே பேசிய வைகோ, அரசாங்க வருமானத்திற்காக மதுக்கடைகளை திறந்துவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். மதுவினால் ஏழை, எளியவர்களின் குடும்பங்களின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளதாக கூறிய அவர், இலவசத்திற்காக மதுக்கடை வருமானத்தை நம்பியுள்ளது. அரசு வருமானத்திற்காக பொதுமக்களின் வாழ்க்கையை குழிதோண்டி புதைப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் வைகோ கேள்வி எழுப்பினார். நடைபயணம் செல்லும் வழி எங்கிலும் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் வைகோவிற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். பூரண மதுவிலக்கை அமல்படுத்தி வைகோ மேற்கொண்டுள்ள நடைபயணம் வரும் 25ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக