லாசன்: சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் செய்யபட்டிருக்கிறது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு அமைப்பும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்
வாரியம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் வராது என்பதால் கிரிக்கெட் மட்டுமே நாம் வெளியில் போய் ஆட முடியும். இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தல் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படவில்லை என்பது புகார். இதைத் தொடர்ந்து இன்று சுவிஸின் லாசனின் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தற்காலிகமாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இடைநீக்கத்தால் 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்க முடியாத ஒரு நிலை உருவாகி உள்ளது. அதேசமயம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் கூட நம்மால் கலந்து கொள்ள முடியாது. எனவே இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை இந்தியாவுக்குப் பெரும் பாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக