அமெரிக்காவில் சாண்டிப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்த சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் தேவை என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிழக்கு கடலோர மாகாணங்களை கடந்த ஒக்ரோபர் மாதம் சாண்டி என்ற புயல் தாக்கியதனால் 12 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்த சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் தேவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒபாமா இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் கூடுதல் தொகை தேவைப்படலாம் என நியூயோர்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களின் நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக