இந்தியச் சந்தையில் நுழைவதற்கு அமெரிக்க எம்.பி. மற்றும் இந்திய எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக பிரபல வால்மார்ட் நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ரூ.125 கோடியைச் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில்லரை வணிகத்தில் சர்வதேச ஜாம்பவானாக விளங்கும் ‘வால் மார்ட்’ நிறுவனம், இந்தியாவில் தங்களின் வணிக அடையாளப் பெயருடன் கூடிய சூப்பர் மார்க்கெட்களை தொடங்க 2008-ம் ஆண்டு முதல் பகீரத முயற்சி செய்து வந்துள்ளது. இதற்காக 2008-ம் ஆண்டு முதல் 30.09.2012 வரை ரூ.125 கோடியை அந்நிறுவனம்,
அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களுக்காக செலவிட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களுக்காக செலவிட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி, உள்நாட்டு மற்றும் அயல்நாடுகளில் காரியம் சாதித்துக் கொள்ள நினைக்கும் தனியார் நிறுவனங்கள், அரசியல் மற்றும் அரசின் செல்வாக்கு பெற்ற நபர்களின் உதவியை நாடலாம். இதற்காக அந்த நிறுவனம் பணமும் செலவிடலாம். ஆனால், இப்படி காரியம் சாதிப்பதற்காக யார், யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்று காலாண்டுக்கு ஒருமுறை, அமெரிக்க மேல் சபையில் கணக்கு தாக்கல் செய்தாக வேண்டும்.
அவ்வகையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்திய சில்லரை வணிகத்தில் முதலீடு செய்யும் நோக்கில், அமெரிக்க எம்.பி.க்கள், அந்நாட்டு வியாபார பிரதிநிதிகள், வெளியுறவு துறை அதிகாரிகளை வால்மார்ட் நிறுவனம் ‘சரியான முறையில் கவனித்து’ உள்ளது. அந்நிறுவனம், அமெரிக்க மேல்சபையில் தாக்கல் செய்த ‘லாபியிங்’ செலவு கணக்கின் மூலம், இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது வரை 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.125 கோடி) இந்திய சில்லரை வணிகத்தில் கால் பதிக்கும் நோக்கத்தில் வால்மார்ட் நிறுவனம் வாரி இரைத்துள்ளது. இந்த தொகையில் இந்தியா தொடர்புடைய ‘லாபியிங்’ செலவுகளுக்காக மட்டும் ரூ.18 கோடி செலவாகியுள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும், இந்தியாவுக்குள் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் உள்ளிட்ட விவகாரங்களுக்காக ரூ.10 கோடியை வால் மார்ட் செலவிட்டுள்ளது.
இந்தியர்களிடமிருந்து பல ஆயிரம் கோடிகளை தொடர்ச்சியாக சம்பாதிக்கும் லாப நோக்கத்தில், வால் மார்ட் மட்டும கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.125 கோடி செலவிட்டுள்ள உண்மை, தற்போது அம்பலமாகி உள்ளது.
இதற்கிடையே மிக விரைவில் டில்லியில் பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ ஆகியன தனது வர்த்தகத்தினை திறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக