நாட்டின் 10 பிரதான அரசியல் கட்சிகளுகு கடந்த 5 ஆண்டுகளில் ரூ2,500 கோடிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த ரமேஷ் வர்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருக்கும் தகவல்கள்: நாட்டில் உள்ள 10 முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2, 490 கோடிக்கு வரிவிலக்குடன் கூடிய
நன்கொடை கிடைத்துள்ளது. இதில் 80% காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1385. 36 கோடி, பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ682 கோடி, ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ரூ.15.51 கோடி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.147.18 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.141.34 கோடி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ85.61 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.28.47 கோடி, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ரூ.7.16 கோடி, லோக் ஜனசக்தி கட்சிக்கு ரூ.2.55கோடி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு ரூ.2.85 கோடி வரிவிலக்குடன் கூடிய நன்கொடை கிடைத்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக