சனி, டிசம்பர் 17, 2011

கடாபியை கொன்றது போர்க்குற்றம்: சர்வதேச கிரிமினல் கோர்ட்டு அறிவிப்பு


நியூயார்க், டிச. 17-
லிபியா முன்னாள் அதிபர் கடாபி கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி புரட்சி படையினரால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவரது கொலை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கொல்லப்பட்டது போர்க்குற்றம் என சர்வதேச குற்றவியல் கோர்ட்டின் தலைமை வக்கீல் லூயிஸ் மொரேனோ அகாடம்போ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, லிபியா முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டது ஒரு போர்க்குற்றமாகும். அது குறித்து வருகிற ஜனவரி 10-ந்தேதி லிபியா அரசு கோர்ட்டில் பதில் கூற வேண்டும். கடாபியின் மகன் சயீப் அல்- இஸ்லாமும் லிபியா அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிமினல் கோர்ட்டினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவரையும் ஒப்படைப்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக