சனி, டிசம்பர் 17, 2011

தொடர்ந்து சிகிச்சை; துபாயில் இயங்கும் சர்தாரி அலுவலகம்


இஸ்லாமாபாத்,டிச 17-
பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு மாரடைப்பும் அதை தொடர்ந்து முகத்தில் பக்கவாதமும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டு சென்றார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் கடந்த 14-ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆசிப் அலி சர்தாரிக்கு துபாயில்
உள்ள ஜுமேரியாவின் போஷ் என்ற இடத்தில் சொந்த பங்களா உள்ளது
.
அதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து “டிஸ்சார்ஜ்” செய்யப்பட்ட அவர் தற்போது அங்கு தங்கி இருக்கிறார். நோய் குணமடைந்தாலும், அவருக்கு பேச்சு பயிற்சி மற்றும் பிசியோ தெரபி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. எனவே, அங்கு அவருக்கு வீட்டில் வைத்து தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, அவர் எப்போது பாகிஸ்தானுக்கு திரும்புவார் என தெரியவில்லை.
ஆகவே, அதிபரின் அலுவலகம் தற்போது தற்காலிகமாக துபாயில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போதே அதிபர் அலுவலக செயலாளர், உயர்மட்ட அதிகாரிகள் துபாய் சென்று இருந்தனர். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி மீண்டும் 15 ஊழியர்கள் துபாய் புறப்பட்டு சென்றனர்.
அங்கு அவர்கள் அதிபர் அலுவலக பணியை கவனித்து வருகின்றனர்.   இதை அதிபரின் செய்தி தொடர்பாளர் பர்கத் துல்லா பாபர் உறுதி செய்துள்ளார். அதிபர் அலுவலக ஊழியர்கள் துபாய் புறப்பட்டு சென்றது உண்மை, ஆனால் அங்கு அதிபரின் அலுவலகம் செயல்படவில்லை என தெரிவித்துள்ளார். அதிபர் சர்தாரியின் ராணுவ செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவரது குடும்ப டாக்டரும் துபாயில் அவருடன் தங்கியுள்ளனர்.
அவர்கள் கூறும் போது, பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தவே சர்தாரி அவர்களை இங்கு அழைத்துள்ளார். வேறு காரணம் எதுவும் இல்லை என கூறியுள்ளனர். அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி நாட்டுக்கு வெளியே அதிபர் அலுவலகம் அமைக்க முடியாது என சட்ட நிபுணரும் செனட் தலைவருமான பரூக் நாயக் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக