சனி, டிசம்பர் 17, 2011

அணு உலை அபாயம்: ஆவணப்பட திரையிடல் மற்றும் கருத்துரை!


அணு உலை அபாயம்: ஆவணப்பட திரையிடல் மற்றும் கருத்துரை!வரும் தலைமுறைக்குத் திருப்பித் தரப்படவேண்டிய பிறவிக்கடன் அல்லவோ இந்த பூமி."இன்றைய மனிதனின் அறிவுத் தளத்திலும் உணர்வுத் தளத்திலும் மின்சாரம் என்பது என்றென்றைக்குமாக இருந்தது போல் நிலை கொண்டிருக்கிறது. ஆனால் மனித சமூகம் அதிகபட்சமாக 200 ஆண்டுகளாகத்தான் மின்சாரத்தின் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நடைமுறையில்
இந்த வரலாற்றுப் பிரக்ஞையோடுதான் நாம் அணு உலை சம்பந்தப்பட்ட நிலைபாட்டை எடுக்க வேண்டியுள்ளது.

அணு உலை சம்பந்தப்பட்ட நம் நிலைபாடு அணு விஞ்ஞானிகளின், நிபுணர்களின் நிலைபாடுகளைச் சார்ந்ததாக இருக்க முடியாது. மக்கள் நலன் சாராத, இயற்கை நலன் சாராத எந்த விஞ்ஞானமும் முதலீட்டியம் நலம் சார்ந்துதான் இயக்கம் கொள்ள முடியும். இத்தகைய இயக்கத்தைக் கொண்டதுதான் அணு விஞ்ஞானமும். முதலீட்டியம் நலம் சார்ந்த விஞ்ஞானம் எத்தன்மையிலும் மக்கள் நலன் சார்ந்ததாக இயக்கம் கொள்ளும் சாத்தியமற்றது. முதலீட்டியம் நலம் சார்ந்த விஞ்ஞானத்தை எதிர்ப்பது நம்முடைய தார்மீகக் கடமையாகிறது.

செர்நோபில் அணு உலை வெடிப்பை முன்வைத்து இரண்டு ஆவணப்படங்கள்.

கருத்துரை:
தோழர் அ. மார்க்ஸ்
தோழர் ராஜன்குறை

இடம்: ஜி.கே. கல்யாண மண்டபம்
68, எம்.டி.எச். சாலை. அம்பத்தூர், சென்னை 600 053
அம்பத்தூர் (ப.ந) மார்க்கெட் அருகில்

நாள்:
 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 4:00 மணி

பேரழிவிற்குப் பின்னால்...
Surviving Disaster-Chernobyl Nuclear Disaster
ஆவணப் படம்/50 நிமிடம்


உலகில் எல்லா நாடுகளிலும் அணுசக்தி நிறுவனத்தின் செயல்பாடுகள் திரைமறைவில்தான் நிகழ்த்தப்படுகின்றன. இதற்கு இந்தியாவும் எவ்விதத்திலும் விதிவிலக்கல்ல. இந்தத் திரைமறைவு நடவடிக்கைகளின் கொடூர விளைவை, செர்நோபில் அணு உலை விபத்தின் அனுபவங்களை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது.

நரமாமிசம் தின்னும் அணு உலைக்குள்...
Inside Chernobyl's Sarcophagus
ஆவணப் படம் /42 நிமிடம்


அணு உலை வெடிப்பிற்குப்பின் அதன் சங்கிலித் தொடர் பாதிப்புகளை மட்டுப்படுத்தவும் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளவும் செயல்பட்ட விஞ்ஞானிகளின் அனுபவங்கள் மற்றும் துயரங்களை இந்த ஆவணப்படம் முன்வைக்கின்றது.

- அம்பத்தூர் படிப்பு வட்டம், சென்னை
தொடர்புக்கு: 98407 87437

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக