இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் லிட்டருக்கு 65 காசுகள் உயர்த்தப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை மூலம் லிட்டருக்கு 55 காசுகள் முதல் 56 காசுகள் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட லிட்டருக்கு உத்தேசமாக 65 காசுகள் உயர்த்த அனுமதிக்குமாறு அரசை எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.பெட்ரோலியப் பொருள்களின் விலையை தீர்மானிப்பதற்கான கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை (டிச.15) நடைபெற உள்ளது. அப்போது விலை உயர்வு இறுதி செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர் விலை உயர்வு டிசம்பர் 16 முதல் அமல்படுத்தப்படும்.ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக