வியாழன், டிசம்பர் 15, 2011

அமெரிக்காவில் சட்டம் நிறைவேறியது : பாகிஸ்தானுக்கு ரூ3,500 கோடி நிதியுதவி ரத்து

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு வழங்கும் ரூ.3,500 கோடி நிதியுதவியை ரத்து செய்வதற்கான சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து பாகிஸ்தான்  அமெரிக்க உறவில் நெருக்கடி முற்றியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில்
உள்ள தலிபான்களை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் அழித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் நேட்டோ விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதற்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி, ராணுவ தளபதி கியானி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேட்டோ படை தாக்குதல், தவறுதலாக வீரர்கள் முகாம் மீது நடத்தப்பட்டு விட்டது என்று அமெரிக்கா மன்னிப்பு கேட்டது. அதை ஏற்க மறுத்த பாகிஸ்தான், நாட்டில் முகாமிட்டுள்ள விமான படை தளத்தை காலி செய்து வெளியேற நேட்டோ படைக்கு உத்தரவிட்டது. அதன்படி அமெரிக்க விமானப் படை வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறினர். இதற்கிடையில், பாகிஸ்தானுக்கான ரூ.3,500 கோடி நிதியுதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர்.

 இது குறித்து ஓட்டெடுப்பில், பாகிஸ்தானுக்கு நிதியுதவி ரத்து செய்ய 283 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். இதையடுத்து சட்டம் நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக