உத்தர பிரதேசத்தில் ஷாஜகான்பூரைச் சேர்ந்த, மத்திய உள்துறை முன்னாள் துணைஅமைச்சரும் ஆன்மிகத்தலைவருமான சுவாமி சின்மயானந்தா மீது தாக்குதல், வன்புணர்வு, கட்டாய கருக்கலைப்பு கொலை முயற்சி ஆகிய வழக்குகளை மாநில காவல்துறை புதன்கிழமை மாலை பதிந்துள்ளது. ஷாஜகான்பூரில் அவரது ஆசிரமத்தில் பல ஆண்டுகள் கழித்த ஒரு பெண்
செய்த புகாரின் பேரில் இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகள் கோட்வாலி நகர நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.காவல்துறை பொது கூடுதல் இயக்குனர் (குற்றப்பிரிவு) சுபேஷ் குமார் சிங் கூறுகையில், "இவ்வழக்கில் பெண் முறையீட்டில் இருந்த விஷயங்கள் ஆராயப்பட்டுவருகின்றன" என்று தெரிவித்தார். ஸ்வாமி சின்மயானந்தாவை ஆசிரமத்தில் தொடர்பு கொள்ள செய்தியாளர்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை.
சில நாள்கள் முன்பு, ஷாஜகான்பூரின் மாவட்ட காவல் தலைமை அலுவலகம் வந்த பெண்ணொருவர் சின்மயானந்தா மீது தாக்குதல், கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி குற்றம் சாட்டினார். சின்மயானந்தாவின் ஆசிரமத்தில் தங்க நேரிட்ட போது இக்குற்றங்கள் தனக்கு இழைக்கப்பட்டதாகவும் அப்பெண் மூத்த காவல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
ஆசிரமத்தில் இருந்தவரை, உயிருக்கும் உத்தரவாதமின்றி பயந்து பயந்து இருந்ததாகவும், பன்முறை தன்மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்த அப்பெண், ஆசிரமத்திலிருந்து வெளியேற முயற்சி செய்து வெளியேறி அதன்பின்பே முறையிட வந்ததாகவும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக