சனி, டிசம்பர் 03, 2011

டெஹ்ரானில் தூதரக தாக்குதலின் எதிரொலி : தூதரகங்களை மூட பிரிட்டிஷ் அரசு உத்தரவு!



டெஹ்ரான்: ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில், பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள தனது தூதரகங்களை மூடவும் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரான் மீது, மேலும்
பல புதிய தடைகளை விதிக்க, பிரிட்டன் முடிவு செய்துள்ளது. அண்மையில், ஈரான் மீது, பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்தது. 

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை ஈரானியர்கள் சூறையாடினர்.

இதற்காக, ஈரான் அரசு வருத்தம் தெரிவித்தபோதும், பிரிட்டிஷ் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக