செவ்வாய், டிசம்பர் 18, 2012

நீதிபதி குடும்பத்தினரின் தலைகளை துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை !

உக்ரைன் நாட்டில் நீதிபதி அவரது மகன், மகனின் காதலி ஆகிய மூவரும் ‌தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். உக்ரைன் நாட்டின் கஹார்கிவ் மாகாண நீதிபதி வொலோ டைமர் ட்ரோபர்மோ (58). இவரது , மகன் ஆகியோர் இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 15-ம் தேதியன்று, நீதிபதி, அவரது
மகன், மகனின் கா‌தலி ஆகிய மூவரும் தலை துண்டித்து கொடூரமானமுறையில் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக உக்ரைன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வீட்டில் சில பொருட்கள் காணாமல் போய் இருந்ததால் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் புகுந்த கொள்ளையர்கள் மூவரையும் கொலைசெய்து தப்பியோடி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 15-ம் தேதி அந்நாட்டின் நீதிபதிகள் தினம் என்பதால் கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா எனவும் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக