வெள்ளி, டிசம்பர் 14, 2012

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது !

அமெரிக்காவில் எதிர்வரும் 2043ஆம் ஆண்டில் வெள்ளை இனத்தவர்கள் சிறுபான்மை இனமக்களாக இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் 2060ஆம் ஆண்டில் மக்கள் தொகையின் நிலை என்ன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவை மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்டது. இதில், தற்போது பெரும்பான்மையாக உள்ள வெள்ளை இனத்தவர்கள் எதிர்வரும் 2043ஆம் ஆண்டில் சிறுபான்மை இனத்தவர்களாக இருப்பர்.
எனவே வெள்ளையர்கள் மற்றும கறுப்பினத்தவர்கள் சரிசமமாக இருப்பர். தற்போது 37 சதவிகிதம் சிறுபான்மை இனத்தவர்களாக இருப்பவர்கள் 2060ஆம் ஆண்டில் 57 சதவிகிதமாக உயருவார்கள்.
இதன் மூலம் தற்போது 11 கோடியே 62 லட்சமாக இருக்கும் மக்கள்தொகை, 24 கோடியே 13 லட்சமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 2024-ம் ஆண்டில் 19 கோடியே 78 லட்சம் ஆக இருக்கும் வெள்ளையர்களின் மக்கள் தொகை, 2060-ம் ஆண்டில் படிப்படியாக 2 கோடியே 6 லட்சம் பேர் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக