மும்பை: “எனது பெயர் அபூ ஜிண்டால் அல்ல! என்னை கட்டாயப்படுத்தி போலீசார் வாக்குமூலம் வாங்கினார்கள்” என்று மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ஸபீஉத்தீன் அன்ஸாரி கூறியுள்ளார்.திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அன்ஸாரி, மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டது என்று அன்ஸாரி நீதிமன்றத்தில் கூறியதாக அவரது வழக்கறிஞர் இஜாஸ் நக்வி தெரிவித்தார்.பல்வேறு தாக்குதல்கள் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட வாக்குமூலங்களை அன்ஸாரி அளிக்கவில்லை. விசாரணை அதிகாரிகள் எதனை கூறுமாறு கட்டாயப்படுத்தினார்களோ, அதனை மட்டுமே அவர் கூறியுள்ளார் என்றும், அபூஜிண்டால் என்ற பெயருடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இஜாஸ் நக்வி கூறினார்.அஜ்மல் கஸாப், அன்ஸாரியை அடையாளம் காட்டினார் என்ற குற்றம் சாட்டையும் இஜாஸ் நக்வி மறுத்தார். அவ்வாறு எவ்வித அடையாள அணிவகுப்பும் நடத்தப்படவில்லை என்று இஜாஸ் ஹிந்து பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக