செவ்வாய், டிசம்பர் 11, 2012

கட்ஜூவின் 'இடியட்ஸ்' பேச்சு- நோட்டீஸ் அனுப்பிய சட்ட மாணவர்கள் !

லக்னோ: 90% இந்தியர்கள் முட்டாள்கள் என்று கருத்து தெரிவித்த இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரான நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் 2 சட்டக் கல்லூரி மாணவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கட்ஜூ, 90% இந்தியர்கள் முட்டாள்கள் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இது பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவாகவும்
எதிர்ப்பாகவும் விமர்சனங்களை உருவாக்கியிருந்தது. பின்னர் விளக்கம் அளித்த கட்ஜூ, தாம் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் சொல்லவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் உ.பியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள், தன்யா தாகூர் அவரது சகோதரர் ஆதித்யா தாகூர் இருவரும் கட்ஜூவின் கருத்து தங்களைக் காயப்படுத்தி இருப்பதால் 30 நாட்களுக்குள் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதற்கும் பதிலளித்திருக்கும் கட்ஜூ, தாம் எந்த ஒரு சமூகத்தையோ மதத்தையோ குறிப்பிட்டுப் பேசவில்லை. பொதுவாக 90% இந்தியர்கள்தான் குறிப்பிட்டேன். அதில் உங்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக