வெள்ளி, டிசம்பர் 14, 2012

ஹமாஸ் - அல் பதாஹ் - ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

  ஹமாஸ் இயக்கத்தினரும் அல்ஃபதாஹ் இயக்கத்தினரும் திங்கட்கிழமை அன்று கூட்டாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அது இஸ்ரேலுக்கு பேரிடியாக இருந்தது. அதில் தங்களுக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாட்டை களைந்து தாங்கள் இன்று முதல் ஒருங்கிணைந்து விட்டதாக அறிவித்தனர். இந்த போரினால் மற்றொரு நன்மையும் நடந்தது.

“இன்று முதல் எங்களுடைய மற்ற தலைவர்களுடனான கருத்து வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என அறிவிக்கிறோம்” இவ்வாறு ஜிப்ரீல் ரஜப் என்ற மூத்த ஃபதா அதிகாரி ரமல்லாவில் நடந்த பேரணியில் தெரிவித்தார். இது பாலஸ்தீன போராட்டத்தில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது. (http://blogs.aljazeera.com/topic/gaza/breaking-hamas-fatah-rivals-agree-unite-over-gaza-crisis)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக