புதன், டிசம்பர் 05, 2012

34,000 ரன்களை எடுத்தார் சச்சின் டெண்டுல்கர் !

கொல்கத்தா: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். மான்டி பனேசரின் பந்தில் தனது 2வது ரன்னை அவர் எடுத்தபோது டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் தனது 34 ஆயிரமாவது ரன்னை எட்டினார் சச்சின்.கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் இத்தனை ரன்களைக்
குவித்ததில்லை. பேட்டிங்கில் சொதப்பினாலும் கூட சாதனைகள் படைப்பதில் சச்சினை யாருமே நிறுத்த முடியாது. அவ்வப்போது ஏதாவது ஒரு சாதனையை அவர் படைத்தபடியே இருக்கிறார். அந்த வகையில்தான் இன்றைய சாதனையும.
இன்று கொல்கத்தாவில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின்போது சச்சின் டெண்டுலகர் பனேசர் பந்தை அடித்து விட்டு தனது 2வது ரன்னை எடுத்தபோது 34 ஆயிரமாவது ரன்னை எடுத்தார் சச்சின்.
23 வருடமாக கிரிக்கெட் ஆடி வரும் சச்சின் டெண்டுல்கர், 192 டெஸ்ட் போட்டிகளில் 15,560 ரன்களை குவித்துள்ளார். 463 ஒரு நால் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களை எடுத்துள்ளார்.
சச்சின் சர்வதேச அளவில் ஒரே ஒரு டுவென்டி 20 போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக