காஸ்ஸா:ஃபலஸ்தீன் மண்ணில் தீரமிக்க சியோனிச எதிர்ப்பு போராட்டத்தின் வீரமிக்க போராளிகளான ஹமாஸின் 25-வது ஆண்டு விழாவில் பங்கேற்க காஸ்ஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பிரம்மாண்டமான பேரணிக்கு பிறகு மக்களிடையே ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் உரை நிகழ்த்தினார்.
காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தனர். 45 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கைக்கு பிறகு ஃபலஸ்தீன் மண்ணிற்கு திரும்பிய காலித் மிஷ்அலின் வருகை ஹமாஸ் உறுப்பினர்களுக்கு உத்வேகத்தை அளித்தது. இந்த மாநாட்டில், மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளைச் சேரந்த சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.ஹமாஸின் அரசியல் எதிரியான ஃபதா கட்சியைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளதால், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாநாட்டையொட்டி, காஸா எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அண்மையில் இஸ்ரேலுடன் நடத்தப்பட்ட 8 நாள் சண்டைக்குப் பிறகு, ஹமாஸ் இயக்கத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.ஃபலஸ்தீன் காஸ்ஸாவிற்கு வருகை தந்தது தனது 3-வது பிறவி என்றும், ஃபலஸ்தீனுக்காக உயிரை தியாகம் செய்யவும் தயார் என்று காலித் மிஷ்அல் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக