புதன், டிசம்பர் 05, 2012

துருக்கி கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் பயணித்த 10 பேரை காணவில்லை

ரஷ்யாவிலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வோல்கா பால்ட்-199 என்ற சரக்கு கப்பல் ஒன்று துருக்கி அண்டால்யா நகருக்கு புறப்பட்டது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல் கடற்பகுதியில் உள்ள கருங்கடல் வழியாக அது பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது கடல்
கொந்தளிப்புடன் பலத்த காற்று வீசியது. இதில் அந்த சரக்கு கப்பல் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.


இதில் கப்பல் மாலுமி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். 4 பேரை மீட்புப்படையினர் காப்பாற்றினர். கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் காணாமல் போன 10 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.



மேலும் அப்பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த மற்றொரு கப்பலை இழுக்கும் முயற்சியை மற்ற இழுவைப் படகுகள் மேற்கொண்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக