ஞாயிறு, டிசம்பர் 18, 2011

"NCHRO"கையெழுத்து இயக்கத்தை தமிழகத்தில் துவங்கியது.


தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான"NCHRO"(nationanal confederation of human rights organisation) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 15 வருடத்திற்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவிகளான முருகன், சாந்தன்,பேரறிவாளன்,  ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை தமிழகத்தில் கடந்த 14-ஆம் தேதி புதன் கிழமை துவங்கியது. அதன் துவக்கமாக சென்னையில் உயர்நீதி மன்ற வளாகத்தின் முன்பாக   கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது அதற்கு முதல் கையெழுத்திட்டு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரான தோழர் பழ.நெடுமாறன் துவக்கிவைத்தார்.



"NCHRO " வின் தமிழ்நாட்டின் மாநில துணைத்தலைவர்.M.G.K.நிஜாமுதீன் அவர்கள் தலைமை தாங்கினார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக