நள்ளிரவில் தனது வாடகை வாகனத்தில் ஏறிய சவூதி அரேபியர் மறதியாகத் தவறவிட்ட பெட்டியை நேர்மையாக ஒப்படைத்து பாராட்டும் பரிசும் பெற்றுள்ளார் ஷார்ஜா வாகனமோட்டி ஒருவர்.
முஹம்மது தாஹிர் அமீன் என்ற அந்த பாகிஸ்தானி ஓட்டுநர், பயணி தவறவிட்டப் பெட்டியைக் கண்ட போது அதனுள் இரண்டு இலட்சம் சவூதி ரியால்கள் கரன்சியும், காசோலைத் தொகுப்புகளும், ஒரு மடிக்கணினியும், கை பேசியும், இன்னும் சில கடவுச்சீட்டுகளும் இருந்தனவாம்.
கொஞ்சமும் சஞ்சலமுறாமல், உடனடியாக, பயணம் தொடங்கிய ஷார்ஜா விமான நிலையம் வந்த ஓட்டுநர், அங்கிருந்த போக்குவரத்துத் துறை அலுவலகத்தில், பொருட்களை ஒப்படைத்தார்.ஓட்டுநர் தாஹிர் அமீனுடைய நேர்மையைப் பாராட்டிய அதிகாரிகள், குறிப்பிட்ட அளவு வெகுமதியையும் பாராட்டுக்களையும் வழங்கினர். மேலும், அவர் போக்குவரத்துக் குற்றங்களுக்காகக் கட்ட வேண்டியிருந்த அபராதத் தொகையும் கணிசமாகக் குறைக்கப்பட்டது.இதற்கிடையில், ஷார்ஜா விமான நிலையத்திற்கு வந்த அந்த சவூதி பயணியைக் கண்டறிந்து, அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அவரும் மிகுந்த மகிழ்ச்சியுற்றார்.
இப்படியும் சில நல்ல மனிதர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக