வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள சால்மியா எனும் பகுதியில் உள்ள ஒரு பிஸியான ஷாப்பிங் மாலில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த இளம் பெண்களை 9 வாலிபர்கள் அநாகரீகமான சொற்களை கூறி கிண்டல் செய்தனர்.
இதை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டியினர் 9 வாலிபர்களையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட 9 வாலிபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின் 9 வாலிபர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. பின் பொதுமக்கள் முன்னிலையில் இனி இத்தகைய தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி கையெழுத்திட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக