தமிழகத்தின் பலதரப்பட்ட தொலைக்காட்சி ஓடைகளில் எஸ்.எஸ் மியூசிக் என்னும் பெயரில் திரையிசையோடை ஒன்றும் உண்டு.
கடந்த வருடம் நவம்பர் இறுதி வாரங்களில் இத் தொ.கா ஒளிபரப்பிய சிஸ்லிங் ஹிட்ஸ் என்னும் பெயரிலான இசை நிகழ்ச்சியில் ஆட்சேபகரமான, வக்கிரமான நீலப்படக் காட்சிகள் ஒளிபரப்பப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை உறுதிசெய்த மின்னணு ஊடக கண்காணிப்புமையம் (EMMC) தனது அறிக்கையை செய்தி ஒளி/ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.
அமைச்சகம் தனது ஆட்சேபணையை நீதிமன்றத்திடம் முறையிட்டது. பெண்களை மிகவும் தாழ்த்தும்விதத்திலும், பொது ஒளிபரப்புக்குத் தகுதியற்றதாகவும் இக்காட்சிகள் இருப்பதாக அம்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தத் தொ.கா ஓடை நிர்வாகிகளுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியது. அந்த தொ.கா ஓடை நிர்வாகம் சமர்ப்பித்திருந்த குறுவட்டுகளில் நீலப்படக் காட்சிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அத் தொகா கடந்த நவம்பர் 22 2010 முதல் நவம்பர் 29 2010 வரை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செய்தி தொடர்பு அமைச்சகம் மேல் முறையீடு செய்து மீண்டும் தடை விதிக்கக் கோரியது. இம்மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் எலிப் தர்மா ராவ், ஆர், சுப்பையா அடங்கிய குழு 'புதிய தடைக்காலத்தை'த் தீர்மானித்து அனுப்பும் படி அமைச்சகத்துக்கு அறிவுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக