திங்கள், டிசம்பர் 05, 2011

சவூதி: வேலை நேரங்களில் 'ஸ்மார்ட் ஃபோன்கள்' முடக்கப்படும்

altசவூதி அரசாங்க ஊழியர்கள் பணி நேரத்தில் ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கத் தடை வரும் என்று ஜெத்தாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ ஃபோன்கள், ஐ பாட்கள், பிளாக்பெர்ரி கருவிகள்  ஆகிய உள்ளிட்ட அதிதிறன் பேசிகளை (ஸ்மார்ட் ஃபோன்கள்) அரசு ஊழியர்கள்  வேலை நேரத்தில் உபயோகிப்பது குறித்து பொதுமக்களிடமிருந்து பெருவாரியான முறையீடுகள் வந்துள்ளன.

அதையொட்டியே , இவ்வாறு ஆலோசிக்கப்படுகிறது என்று  பெயர் குறிப்பிடப்பட விரும்பாத சவூதி குடியுரிமை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகத் துறை மற்றும் நகராட்சிகள் துறையிலும் இரண்டு துணை அமைச்சர்கள் இதுகுறித்து முறையீடுகள் பெற்றுள்ளனர்.மேலும், கடந்த ஆறுமாதங்களாக, பொதுமக்களிடமிருந்து வாய்வழி முறையீடுகள் அதிகமதிகம் பெறப்படுவதாக அதே குடியுரிமை ஆணைய அலுவலர் தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் சவூதி அரசு ஊழியர்கள் 618,000 பேர் இருந்தனர். இவ்வாண்டின் இறுதியில் அத்தொகை 725,000 என்று உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் இத்தடையை பொதுவாக ஆக்குவதற்கு அமைச்சர்கள் குழு ஆலோசித்துவருவதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக