சனி, டிசம்பர் 10, 2011

கேரள நாளிதழ்களில் தமிழக அரசு முழு பக்க விளம்பரம்!


முல்லை பெரியாறு அணைகட்டு விவகாரம் அரசியல்ரீதியாக நாளுக்கு நாள் தமிழக கேரள அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அணைகட்டு பாதுகாப்பானது என கேரளாவின் பிரபல நாளிதழ்களில் தமிழக அரசு முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளது.  விளம்பரத்தில் அணைகட்டு பாதுகாப்பானது என்றும், இதன் கட்டமைப்பு குறித்து கேரள மக்கள் கவலைப்பட வேண்டாம்
என்றும் குறிபிடப்பட்டுள்ளது. மேலும் பிரிவினை சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் விளம்பரத்தில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என்றும், சுமார் 4 இலட்சம் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்குமளவுக்கு அணைகட்டு வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதாகவும் விளம்பரத்தில் குறிபிடப்பட்டுள்ளது.  விளம்பரத்தின் முடிவில், சுமூகமான உறவைப் பேணிகாப்பதில் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக