சனி, டிசம்பர் 03, 2011

பெயர் ஒன்றாக இருந்ததால் தலித் சிறுவன் படுகொலை

உயர் ஜாதிக்கார சிறுவன் ஒருவனின் அதே பெயரை கொண்டிருந்ததால், தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பஸ்தீ மாவட்டம் ராதாப்பூர் கிராமத்தில் வாழும் ராம் சுமர் என்பவர் தலித் சமுகத்தை சேர்ந்தவர். இவருக்கு நீரஜ் குமார், தீரஜ் குமார் என இரு மகன்கள். அதே ஊரில் வாழும்

ஜவஹர் சவுத்ரி என்ற உயர் ஜாதிக்காரரின் மகன்களுக்கும் அதே பெயர்கள்.

இரு குடும்பத்தினரது பிள்ளைகளுக்கும் ஒரே பெயர் என்பதால், நெடுநாளாக அவர்களிடம் பிரச்சினை இருந்து வந்ததாகவும், சுமரின் பிள்ளைகளின் பெயரை மாற்றிவிடுமாறு, ஜவவஹர் சவுத்ரி ராம் எச்சரித்து வந்ததாகவும் காவற்துறை துனை பொறுப்பதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 22ம் திகதி, உணவு சாப்பிட்டுவிட்டு, நண்பன் வீட்டில் போய் தொலைக்காட்சி பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்ற 14 வயதே ஆன, சுமரின் மகன் நீரஜ் குமார் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் ஒரு வயலிலிரிருந்து சடலமாக மீட்கப்பட்டதுடன், கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதையடுத்து சவுத்ரி குடும்பத்தின் நண்பர்கள் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே இக்குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டுள்ளது என ஜவஹர் சவுத்ரி கூறியுள்ளார். ஆனால் ஜவஹர் சவுத்ரியின் இரு மகன்களும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக