சனி, டிசம்பர் 03, 2011

ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்

Kalyanasundaramவிழுப்புரம்: பத்தாம் வகுப்பு தனித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் இன்று 300 கேள்விகளை போலீசார் கேட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் நிபந்தனையின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார். அவரிடம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை

மாலை முடிந்தது.

சுமார் 4.30 மணி நேரம் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் முடிவில் அதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பாஸ்கர் கூறுகையில், "கல்யாண சுந்தரத்திடம் இன்று மட்டும் சுமார் 300 கேள்விகள் கேட்கப்பட்டன. அவரிடம் கையெழுத்து மற்றும் எழுத்து மாதிரிகள் வாங்கப்பட்டுள்ளன. அவரிடம் மீண்டும் விசாரணை தொடரும்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக