சனி, டிசம்பர் 03, 2011

2G வழக்கில் ஜாமீன் கிடைத்த கனிமொழி 3G வேகத்தில் சென்னை வந்தார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை ; டெல்லியில் இருந்து கனிமொழி இன்று பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் திமுக எம்.பி. கனிமொழியை சிபிஐ போலீசார்
கடந்த மே மாதம் கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த 28ம் தேதி (திங்கட்கிழமை) டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. மறுநாள் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக வழக்கு விசாரணைக்காக அவர் டெல்லியி லேயே தங்கியிருந்தார். 3ம் தேதி அவர் சென்னை வருவார் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 11.05 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட கனிமொழி, பகல் 1.30 மணிக்கு சென்னை வந்தார். அவருடன் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், அவரது மனைவி ரேணுகா ஆகியோரும் வந்தனர். 6 மாதத்துக்கு பிறகு சென்னை வந்த கனிமொழியை விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், செல்வி செல்வம் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். திமுக மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர்.டி.சேகர், சுதர்சனம் மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் கனிமொழியை வரவேற்றனர். ஏராளமான தொண்டர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து நேராக சிஐடி காலனியில் உள்ள வீட்டுக்கு சென்றார் கனிமொழி. அங்கும் அவருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு கனிமொழி பேட்டி அளிக்கையில், "2G"-ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது முதல் படி. இந்த வழக்கில் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபித்து வழக்கில் இருந்து சட்டப்படி விடுதலையாவேன். இப்போது சென்னைக்கு மீண்டும் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக