சென்னை : முல்லை பெரியாரில் 142 அடி நீரைத்தேக்க கேரள நீர் பாசன சட்டத்தில் திருத்தம் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியது. இதில் சிறப்பு தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். எதிர்வரும் காலங்களில் முல்லை பெரியார் அணையில் 152 அடி தண்ணீரை தேக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 152 அடி நீரை
தேக்க கேரள அரசு தடையாக இருக்க கூடாது எனவும் முல்லை பெரியாரில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்றும் முல்லை பெரியாரில் மத்திய படைகளை நிறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக