வியாழன், டிசம்பர் 08, 2011

பாபர் மசூதி உடைப்பும்! அது தரும் படிப்பினையும்!

 பாபர்  மசூதி என்ற முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை ஹிந்து பயங்கரவாதிகள் 1992  டிசம்பர் 6 தேதி உடைத்து தரைமட்டம் ஆக்கினர். இது இந்திய வரலாற்றில்கருப்பு தினமாகி போனது.

பயங்கரவாதி அத்வானி தலைமையில் ரத யாத்திரை என்றபெயரில் ஒரு ரத்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை போன இடமெல்லாம் முஸ்லிம்களின் இரத்தம் ஒட்டப்பட்டது. 



இறுதியாக முஸ்லிம்களின் 450 வருட பாரம்பரிய மிக்க மசூதி, ஆயிரகணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் ஹிந்து தீவிரவாத இயக்கங்களால் திட்டமிட்டு உடைக்கப்பட்டது. அத்தோடு இந்தியாவின் மதச்சார்பின்மையும் உடைந்து போனது. 

இதை செய்ய அவர்கள் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு மேல் எடுத்திருகிறார்கள். ஹிந்து பாசிஸ்டுகள்  பாபர் மசூதியோடு மட்டும் தங்கள் திட்டத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. பாபர் மசூதி தொடங்கி 3600 அதிகமான பள்ளிகளை இந்தியா முழுவதும் உரிமை கொண்டாடுகிறார்கள். 

இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்தியாவின் நீதி மன்றங்களில் நிறைந்திருக்கும் காவி நீதிபதிகள் உலகமே பார்க்க உடைக்கப்பட்ட ஒரு மசூதியை சர்ச்சை கூறிய இடம் என்று பெயரிட்டது. பின்னர் ஹிந்துக்களின் நம்பிக்கை அடிப்படையாக கொண்டு  குரங்கின் கையில் கிடைத்த பூமலைபோல் ஒரு  தீர்ப்பை கொடுத்தது அலகாபாத் காவி மன்றம்.

முஸ்லிம்கள் இப்போது உச்ச நீதி மன்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். உச்ச நீதிமன்றம் எப்படியும்  நமக்கு நீதி வழங்கும் என்று. காவரி நதிநீருக்கும், முல்லை பெரியார் அணைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும், சத்தீஸ்கர் பழங்குடி மக்களுக்கும், காஷ்மீருக்கும், போபால் விசவாய்வு கசிவுக்கும் பதில் சொல்லாத உச்ச நீதி மன்றமும், மத்திய அரசும்  உங்கள் பாபர் மசூதி விசயத்திற்கு மட்டும் எப்படி பதில் சொல்லும் என்று நம்புகிறீர்கள் என்பதுதான் புரியாத புதிர். 

ஆர்.எஸ்.எஸ். சொன்ன மாதிரி முஸ்லிம்களுக்கு இரண்டு வழிகள் உண்டு ஒன்று பாகிஸ்தான், மற்றொன்று கபர்ஷ்தான் ( அடக்கஸ்தலம்). கோழைகளாக இருத்தால் அதை இரண்டையும் தேர்ந்தெடுங்கள் வீரர்களாக இருந்தால் இதை எதிர்த்து போராட முன்வாருங்கள். வருடா வருடம் பாபர் மசூதி பெயரை சொல்லி ஊர்வலம் நடத்துவதால் எந்த பிரோஜனமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

இந்த அநியாய ஆட்சிகாரர்களை, பாசிச பயங்கரவாதிகளை  எதிர்த்து நீங்கள் போடும் வேற்று கோஷங்களால் எந்த பயனும் ஏற்ப்பட  போவதில்லை. ஒவ்வொரு வருடமும்  டிசம்பர் 6 தேதிநீங்கள் நடத்தும் போராட்டங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது. குஜராத், பாகல்பூர், நல்லி, மும்பை இப்படி கலவரங்களை பார்த்தும் இன்னும் ஏன் உறக்கம்.  ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள்  துப்பாக்கி சுடும் பயிற்சிகளை எடுத்து ஒரு சிறந்த படையணியாக உங்களை காவு கொள்ள காத்திருகின்றன. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இதுவே உங்கள் முன் நிற்கும் கேள்வி. 





                                      *மலர்விழி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக