வியாழன், டிசம்பர் 08, 2011

ஆன்லைன் அமெரிக்க தூதரகம் – துவங்கிய முதல் நாளே ஈரானில் தடை


தெஹ்ரான்:ஈரானிய மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக அமெரிக்கா ஆன்லைன் தூதரகம் ஓன்றை ஆரம்பித்துள்ளது. இதை ஈரான் கடுமையாக எதிர்த்ததுடன் ஆரம்பித்த முதல் நாளிலேயே இதை தடை செய்துள்ளது. தனது நாட்டினுள் நுழைந்து, சுமூக நிலையை சீர்குலைக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள சதித்திட்டமே இதுவென ஈரான் தெரிவித்துள்ளது.

எனினும் ஈரானிய மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய புரட்சி எற்பட்டதுடன் மூடப்பட்டது. இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவுகள் முழுவதுமாக நின்று போயின.
இந்த இணையத்தளமானது ஆங்கிலம், மற்றும் பார்ஷி மொழிகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுடனான தூதரக உறவுகள் 1979 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. சுமார் 444 நாட்கள் தூதரகம் முற்றுகையிடப்பட்டு,  52 அமெரிக்கர்கள் காவலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக