வியாழன், டிசம்பர் 08, 2011

காந்தியக் கொள்கைகளுக்கு புதிய அர்த்தம் கொடுத்துள்ளார் அன்னா: பவார் பாய்ச்சல்

டெல்லி: என்னை ஒருவர் அறைந்ததற்கு ஆதரவு தெரிவித்தன் மூலம் காந்தியவாதியான அன்னா ஹசாரே வன்முறையைத் தூண்டுகிறார் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவி்த்துள்ளார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை ஹர்விந்தர் சிங் என்னும் வாலிபர் கன்னத்தில் அரைந்தார். இது பற்றி தகவல் அறிந்த காந்தியவாதி

அன்னா ஒரேயொரு அரை தானா? என்று தனது பிளாக்கில் கேட்டிருந்தார். மேலும் பவார் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுகிறார். ஒரேயொரு அறை தானா என்று கூறியதன் மூலம் நான் வன்முறையைத் தூண்டுகிறேன் என்றால் அது சமுதாயத்தை திருத்த உதவும். 

அடித்தவரை விட்டுவிட்டு அதைப் பற்றி பேசிய என்னைத் தான் பெரிதுபடுத்துகிறார்கள் என்று எழுதியுள்ளார்.

இது குறித்து பவார் கூறுகையில்,

காந்தியவாதி அன்னா என் மீது நடந்த தாக்குதலுக்கு ஆதரவு தெரிவி்த்துள்ளார். இதன் மூலம் அவர் வன்முறையைத் தூண்டுகிறார். காந்தியக் கொள்கைக்கு புது அர்த்தம் புகட்டியுள்ளார். அடுத்த முறை என்னை யாராவது தாக்கினால் அவர்களைத் தூண்டிவிடுவது யார் என்று விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றார்.

அன்னா கூறுகையில், பவார் ஆதரவாளர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். நான் அதை ஒரு சிடியில் வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் மக்களுக்கு போட்டுக் காட்டுகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக