இலங்கை கடற்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் எரிந்து கொண்டிருந்த தீயில் தற்செயலாக விழுந்ததன் காரணமான உடல் கருகி மரணமானார். இந்தச் சம்பவம் நேற்று வெலிமடை, வெவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இந்த கடற்படை வீரர்,
தனது வீட்டுக் காணியைத் துப்புரவு செய்து குப்பைக்குத் தீ வைத்துள்ளார். அப்போது அவர் தற்செயலாகத் தீயில் விழுந்து கருகி உயிரிழந்துள்ளார்.
32 வயதான சமிந்த மாலக பண்டார என்ற கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக