வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஈராக்கில் கார் குண்டு வெடித்து 10 பேர் பலி, 25 பேர் காயம்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள காலிஸ் நகர் மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து 10 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் ஈராக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆக்கிரமிப்பு அமெரிக்கப் படைகள் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்த மாதம் இறுதிக்குள்
 ஆக்கிரமிப்பு  அமெரிக்கப் படைகள் முழுவதுமாக, ஈராக்கில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பிவிடும் என்று  அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது ஈராக்கில் 13,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் காலீஸ் பகுதி உள்ளது. அங்குள்ள சந்தைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சந்தைக்கு காய்கறிகள், சரக்குகளை கொண்டு வரும் கார்களுடன் குண்டு வைக்கப்பட்டிருந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. குண்டு வெடிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் ஒரு வாலிபர் அந்த காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக