பெங்களூர்,: கர்நாடகாவில் நடந்த குவாரி மோசடி தொடர்பாக பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடக லோக் அயுக்தா நீதிபதியாக சந்தோஷ் ஹெக்டே இருந்தபோது, குவாரி மோசடி குறித்து விசாரணை நடத்தி கடந்த ஜூலையில் மாநில அரசிடம் அறிக்கை கொடுத்தார். அதில், வெளியுறவுத் துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா, முன்னாள் முதல்வர்கள் தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 4 பேரும் முதல்வராக இருந்தபோதுதான், குவாரி மோசடிக்கு உதவி செய்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி லோக் அயுக்தா நீதிமன்றத்தில் ஆப்ரகாம் என்பவர் நேற்று சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். இது நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக