சனி, டிசம்பர் 10, 2011

இன்று முழு சந்திர கிரணகம்: இந்தியாவில் தெளிவாக தெரியும்

Lunar Eclipseசென்னை: இன்று ஏற்படும் முழு சந்திர கிரகணத்தை கண்ணால் தெளிவாக காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிரகணத்தைக் காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கடைசி சந்திரகிரகணம் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரணகம் இன்று ஏற்படுகிறது. மாலை 5 மணி 2 நிமிடங்களுக்கு தொடங்கும் இந்த சந்திரகிரகணம், இரவு 11 மணி 2 நிமிடம் வரை
நீடித்திருக்கும். ஐந்து மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்விவ் சரியாக இரவு 8 மணி ஒரு நிமிடத்தின் போது, முழு சந்திர கிரகணத்தையும் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் சந்திர கிரகணம் தொடங்கி, முடியும் வரை, முழுவதையும் பார்க்கலாம். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் ஆரம்பநிலையை காண முடியாது. சந்திர கிரணகத்தின் அனைத்துக் கோணங்களையும் பார்க்கும் வகையில் இந்தியா அமைந்தள்ளது எனவே வெறும் கண்களால் இந்த கிரகணத்தை கண்டு ரசிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

சென்னை பிர்லா கோளரங்கம்

சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்க பிர்லா கோளரங்கத்தில் எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்து இருக்கும். பௌர்ணமி நேரங்களில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.

இந்நேரங்களில் சந்திரன் ஒளி குறைந்து காணப்படும். சனிக்கிழமை ஏற்படும் முழு சந்திர கிரகணத்தை தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் வெறும் கண்களால் காணலாம் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனினும், கிரகணத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக