கொல்கத்தா ; கொல்கத்தா மருத்துவமனையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு
, இரண்டு கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மருத்துவமனை இயக்குனர்கள் 6 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்கத்தாவின் தாகுரியா பகுதியில் அம்ரி என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. 7 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தீப்பிடித்தது. மருத்துவமனைக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு ரசாயனங்கள் தரைதளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் மளமளவென தீ அடுத்த தளங்களுக்கும் பரவியது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் ஐசியு, ஐடியு, சிசியு யூனிட்கள் இருந்தன. இவற்றில் 160 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். சிசியுவில் மட்டும் 40-க்கும் அதிகமான நோயாளிகள் இருந்தனர்.
தீ விபத்தில் 87 நோயாளிகள் இறந்தனர். 50-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இரண்டு நர்ஸ்கள் உள்பட 3 மருத்துவமனை ஊழியர்களும் விபத்தில் உயிரிழந்தனர். நர்சுகள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். சிசியுவில் நோயாளிகள், நர்ஸ்கள் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. நோயாளிகளுடன் துணைக்கு வருவர்கள் சிசியுவில் தங்க முடியாது. அவர்கள் வெளியில்தான் காத்திருக்க வேண்டும். தீ பரவியதும், மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் நோயாளிகளே அதிக அளவில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் முக்கிய கட்டிடம், தீ விபத்துக்குள்ளான அனெக்ஸ் கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனை இயக்குனர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் எஸ்.கே.மோடி மற்றும் ஆர்.எஸ்.கோயங்கா இருவரும் பிரபல தொழிலதிபர்கள் ஆவர். இவர்கள் தாங்களாகவே போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதல்வர் மம்தா உறுதி அளித்துள்ளார்.
இதனால் கைதான இயக்குனர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தீப்பிடித்த மருத்துவமனையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றிரவு பார்வையிட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார். மத்திய அரசு சார்பாக உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு சார்பாக ரூ.3 லட்சமும், மருத்துவமனை சார்பாக ரூ.5 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக