ஞாயிறு, டிசம்பர் 11, 2011

பாகிஸ்தானில் மர்ம ஆசாமிகள் தாக்குதல் நேட்டோ படைகளின் 20 டேங்கர் லாரி சாம்பல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகுவெட்டா : பாகிஸ்தானில் மர்ம நபர்கள் ராக்கெட் வீசி தாக்கியதில், நேட்டோ படைகளின் 20 டேங்கர் லாரிகள் வெடித்து சிதறின. பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளில்  மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதல்
நடத்தி வந்தனர். சமீபத்தில் நடந்த தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதில் ஆவேசம் அடைந்த பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரி ஆகியோர், பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற உத்தரவிட்டனர். இதையடுத்து இருநாட்டு உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் நேட்டோ படைகளுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்யும் பணிமனை உள்ளது. இங்கிருந்துதான் பாகிஸ்தானின் மற்ற நகரங்களுக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கும் எரிபொருள் சப்ளை ஆகிறது. இந்நிலையில், மர்ம நபர்கள் நேற்று நேட்டோ பணிமனை மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அத்துடன் ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 20 டேங்கர் லாரிகள் வெடித்து சிதறின. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி மாலிக் அர்ஷத் கூறுகையில், ÔÔதாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறதுÕÕ என்றார். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மர்ம நபர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் டேங்கர் லாரிகள் சரமாரியாக வெடித்து கொழுந்துவிட்டு எரிகின்றன. அதை அணைக்க போராடும் வீரர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக