திங்கள், டிசம்பர் 19, 2011

ரஷ்யா எண்ணெய் கிணறு விபத்தில் 53 பேர் பலி

முர்மானஸ்: ரஷ்ய நாட்டின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய் கிணறு ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நான்கு பேரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 49 பேரின் உடலை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவில் வடமேற்கு உள்ள பகுதியில் முர்மானஸ் மாகாணத்தில்
ஒகாட்ஸ்க் கடல் உள்ளது. இங்கு கொல்ஸ்கயா என்ற இடத்தில் கடலுக்குள் எண்ணை கிணறு உள்ளது. அதில் 67 பேர் பணிபுரிந்தனர். அவர்களில் 53 பேர் நிபுணர்கள், 14 பேர் தொழிலாளர்கள். வழக்கம் போல் எண்ணெய் எடுக்கும் பணியில் இவர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் திடீரென கடும் புயல் வீசியது. இதில் எண்ணெய் கிணற்றின் மேடை கடலுக்குள் விழுந்தது.

உடனே அதில் இருந்த 67 பேரும் கடலில் மூழ்கினர். மீட்புப்படையினர் தேடியதில் 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்கள் தவிர 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய 49 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக